வாஷிங்டன்: வெள்ளை மாளிகை நிருபர்களுடான விருந்தின்போது வெடிப்புச் சத்தம் கேட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய சேவையால் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அந்தச் சத்தம் துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வாஷிங்டன் ஹில்டன் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வெடிப்புச் சத்தம் கேட்ட உடனேயே அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து டிரம்பை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

டிரம்ப் உடன் அவரின் தலைமை ஆலோசகர் ஸ்டிபன் மில்லர் உட்பட பல மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

