Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- பாரதி தமிழ் சங்கத்தின் “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் இனிதே நிறைவு!
- திமுகவுக்கு எத்தனை சீட, மீண்டும் ஸ்டாலின்?
- டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்
- பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
- குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
- பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
- நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
- உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
Author: NEWS DESK
மனாமா: பஹ்ரைன் பாரதி தமிழ் சங்க மகளிர் அணியினர் இணைந்து நடத்திய “மகளிர் மட்டும்” ஒன்றுகூடல் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றாட மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, பெண்கள் தங்களின் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் ஒரு புத்துணர்ச்சி தளமாக இந்நிகழ்வு அமைந்தது. நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:———————————————கலை, பண்பாட்டுச் செயலாளர் ஹன்சுல் தலைமையில், அனிஸ் பாத்திமா, அபிராம், அபி மற்றும் அர்ச்சனா ஆகியோர் இந்நிகழ்வைச் செம்மையாக ஒருங்கிணைத்திருந்தனர். சுவாரஸ்யமான போட்டிகள்:———————————————-புதையல் தேடுதல், அந்தாக்ஷரி, மௌன நடிப்பு மற்றும் நினைவாற்றல் விளையாட்டுகள் என அரங்கம் முழுவதும் உற்சாகம் கரைபுரண்டது. •கலை & நல்வாழ்வு:——————————- ஷர்மிளா, கிரிஸ்டல் குழுவினரின் நடனம், மனிஷாவின் அழகு குறிப்புகள் மற்றும் அபி-அர்ச்சனாவின் யோகா செய்முறை விளக்கம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. பரிசுகள்: Early Bird மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் பங்கேற்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். நன்றி நவிலல்:———————— இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஸ்பான்சர்கள் :சங்கீதா உணவகம், சீரகம் உணவகம், A.Q. ஜுவல்லரிஏ.ஜே. ரதி,…
சென்னை: திமுக கூட்டணி 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். திமுகவின் வெற்றி உறுதி 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதி. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. திமுக கூட்டணி சுமார் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது.
டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் குறித்து தெரியவந்த தகவல்கள்
வாஷிங்டன்: வெள்ளை மாளிகை நிருபர்களுடான விருந்தின்போது வெடிப்புச் சத்தம் கேட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய சேவையால் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அந்தச் சத்தம் துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். https://youtu.be/KYQdg62Rw6k?si=lz7z5n5Ks3nW4Qdv வாஷிங்டன் ஹில்டன் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வெடிப்புச் சத்தம் கேட்ட உடனேயே அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து டிரம்பை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர். டிரம்ப் உடன் அவரின் தலைமை ஆலோசகர் ஸ்டிபன் மில்லர் உட்பட பல மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
பஹ்ரைன் அரசாங்கத்தின் சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் கீழ் இயங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பான பாரதி தமிழ் சங்கம், ஸ்டார் விஷன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து, ஜனவரி 16 , 2026 அன்று இந்தியன் கிளப் வளாகத்தில் சீரும் சிறப்புமாக நடத்த வடிவமைத்துள்ளது. இலாப நோக்கற்ற இவ்வமைப்பானது தமிழ்ச் சமூகத்தின் தேவைகளுக்கு சேவை செய்வதிலும், தமிழ்ப் பண்பாட்டு பாரம்பரியத்தை பேணிப் பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. https://youtu.be/FL_Oh6YddV8?si=H46oekjA1dQRZMpP கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பஹ்ரைன் இந்தியன் கிளப் வளாகத்தில் இது தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது . “தமிழர் திருநாள்” என்றும் “உழவர் திருநாள்” என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் இந்த தைப்பொங்கல் திருவிழா உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் பெருமக்களால் மிகுந்த விமரிசையுடன் கொண்டாடப் படுகிறது . விழா நிகழ்ச்சிகள் காலை 7.30 மணிக்கு தொடங்கும். கோலப் போட்டியுடன் இது ஆரம்பமாகும். ஆண், பெண், குழந்தைகள் அனைவருக்கும் ஏற்றவாறு பல்வேறு விளையாட்டுப்…
சென்னை: “முக்கடல் சூழும் குமரி முனையில், முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால், “தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும் எனவும் தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்” எனவும் அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பினை செயற்படுத்திடும்பொருட்டு, 2026ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் “குறள் வாரவிழா” கொண்டாடிட ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வகையில், சேலம், திருச்சிராப்பள்ளி, தேனி, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் திருக்குறள் நாட்டிய நாடகம் / இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஓவியம்/குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர், வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய நான்கு…
பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
சென்னை: தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் வீரர்கள் பிற நாடுகளுக்குச் சென்று சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல செய்வதோடு நிற்காமல், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் சென்னையில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகிறது. அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் 186 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, உலகமே சென்னையின் அழகை கண்டுகளித்த சென்னை பார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தையம், சென்னை ஓபன் (WTA) சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டி, 7ஆவது “ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னை – 2023” போட்டி, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச…
கபடி வீராங்கனையான கே.எஸ்.ஐஸ்வர்யா, தமிழ்நாட்டிற்காக பல போட்டிகளில் பங்கேற்று விளையாடியவர். கொரோனா காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்பின் மூலம் சினிமாவிற்குள இவர் சமீபத்தில் வெளியான ‘ஜஸ்டிஸ் பார் ஜெனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது ‘சதுரங்கவேட்டை’ நட்ராஜ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோ கே.எஸ்.ஐஸ்வர்யா அளித்த பேட்டி ஒன்றில், “நான் சிறுவயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை. அவர் கடின உழைப்பால் எட்டிய உயரத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். புதுப்புது கதைகளங்களிலும், வித்தியாசமாக படைப்புகளைத் தரும் இயக்குனர்களுடனும் பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இம்மாபெரும் தொழிலாளர் தின விழா, மே 1ஆம் தேதி பஹ்ரைன் கேரளா சமாஜம் உள்ளரங்கில் சிறப்புற நடைபெற்றது. STAR VISION EVENTS & MEDIA PARTNERS பாரதி தமிழ் சங்கத்துடன் இணைந்து அரசாங்க அனுமதி முறையாக பெற்று இந்நிகழ்வினை அழகான வடிவில் முன்னெடுத்தனர். இவ்விழாவில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர். தமிழ் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி திரண்டு அரங்கம் நிரம்பி வழிந்து, கட்டுக்கடங்காது இருந்தபோதிலும் ஏராளமானோர் எந்தவித சலசலப்பும் இன்றி அமைதிகாத்து நின்றுகொண்டே கண்டு ரசித்த உயர்பண்பு எல்லோரையும் கவர்ந்தது. இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், பஹ்ரைன் நாட்டில் தொழிலாளர்களின் அபாரமான பங்களிப்பை பாராட்டுவதும், அவர்களை மகிழ்விப்பதும், கௌரவிப்பதுமாகும். அரசாங்க நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் அரங்கேறின . பஹ்ரைன் அரசாங்க நிறுவனங்களிலிருந்து உயர் அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். வளைகுடா அண்டைய நாடுகளிலிருந்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள்…
“காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது முஸ்லிம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியதாக மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக தலைவருமான ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார். வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாட்டின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது. எந்த கட்சியின் நலனுக்காகவும் கொண்டு வரப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா ராஜ்யசபாவில் பேசியுள்ளார். வக்பு வாரிய மசோதா வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் நிறைவேறியது. இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர். வக்ஃப் மசோதா மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பேசுகையில், “நாட்டின் நலனுக்காகவே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 25 மாநில வக்ஃப் வாரியங்களுடன் கலந்து ஆலோசித்தோம். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவினர் நாட்டின் 25 முக்கிய நகரங்களுக்கு சென்று கருத்துகளைப் பெற்றனர்.…
இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
டெல்லி: மத்திய பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிப்பதால் கடுமையாக எதிர்க்கிறேன் என்று லோக்சபாவில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ எம்பி தெரிவித்தார். லோக்சபாவில் துரைவைகோ எம்பி பேசியதாவது: இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை, ஜனநாயக மாண்புக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை, மதசார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் எதிர்க்கிறேன். இன்னல் முஸ்ஸத்திகீன வல் முஸ்ஸத்திகாத் வ அக்ரளுல்லாஹ கர்ளன் ஹஸ்னன் யுளா அஃபு லஹும் வலஹும் அஜ்ருன் கரீம் என்று அரபி மொழியில் திருகுர்ஆன் வசனம் 57:18 சொல்கின்றது. ஏழை எளிய ஆதரவற்றோருக்கு தானதர்மம் உள்ளிட்ட தொண்டுகளை செய்வது, இறைவனுக்கே கடன் கொடுப்பதற்கு சமமானது என்பதுதான் இதன் பொருள். திருகுர்ஆனில் உள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளை செயல்படுத்துவதற்கும், இஸ்லாமியர்கள் இறை பணிகளை மேற்கொள்வதற்கும் தான் வக்பு…
