Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
- குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
- பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
- நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
- உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
- “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
- இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
- எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
Author: NEWS DESK
எங்க மழைநீர் தேங்குதுனு இப்ப எதிர்க்கட்சிகள் வந்து காட்டணும்.. கூலாக பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் எந்த இடத்தில் மழை நீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகளை காட்டச் சொல்லுங்க.. எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என இன்று தெரிவித்து உள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் கொளத்தூரில் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனையடுத்து ஜி.கே.எம். காலனியில் தொடக்கப்பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை முதல்வர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சீனிவாச நகர் 3 வது பிரதான சாலையில் புதிய சென்னை தொடக்கப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நேர்மை நகரில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் சிஎம்டிஏ மூலம் கட்டப்பட்டு வரும் வணிக…
எங்கும் கேட்கும் தமிழ்! வயநாடு மீட்பு பணிகளில்.. குவிந்த தமிழர்கள்! நெகிழ வைக்கும் நேரடி ரிப்போர்ட்
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் முழுக்க முழுக்க தமிழர்கள் பலர் களமிறங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நாம் நேரடியாக பெற்ற சில முக்கியமான தகவல்களை இங்கே வழங்கி உள்ளோம். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 280 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 1000 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன. அங்கே மீட்பு பணிகளை மாநில அரசின் பேரிடர் மீட்பு படைகள், தேசிய பேரிடர் மீட்பு படைகள் களமிறங்கி தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்கு இடையே கூட்டம் கூட்டமாக தமிழர்கள் அங்கே மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக நேரடியாக வயநாட்டு மக்களிடம் ஒன் இந்தியா சார்பாக பேசினோம். வயநாடு பொதுவாக தமிழர்கள் அதிகம் உள்ள பகுதி. மூன்று மாநிலங்கள் இணையம் இடம் என்பதால் இங்கே தமிழர்கள் அதிகம் உள்ளனர். அதே…
ரயில்வே துறையை மாநில அரசுக்கு ஒப்படைக்க போறீங்களா? மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும், ரயில்வே துறையை மாநில அரசு வசம் கொடுத்துவிடுவார்களா? எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர் இதில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் புறக்கணித்தது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, “சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதியை இந்த…
இன்டிகோ விமானத்தில் மூச்சுமுட்ட, உயிரை கையில் பிடித்து கொண்டு பயணித்தேன்! டிஆர்பி ராஜா சரமாரி புகார்
சென்னை: சென்னையிலிருந்து திருச்சிக்கு இன்டிகோ விமானத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சென்றதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். விமானம்தான் ஆனால் ரோலர் கோஸ்டரில் செல்வது போல் ஒரு பயத்தை உண்டாக்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று மதியம் இண்டிகோ விமானத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பயணம் செய்தார். அப்போது தனக்கும், சக பயணிகளுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை விவரித்துள்ளார். இதுகுறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் இண்டிகோ விமானத்தின் தரம் மோசமாக உள்ளதை அந்த நிறுவனம் சரி செய்ய வேண்டும். இந்த விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் ஒவ்வொரு பயணிகளும் வியர்த்து மூச்சு முட்டுவது போல் இருந்தனர். இந்த ஜூலை மாதம் வெப்பமான வானிலையின் போது, இந்த விமானத்தில் செல்வது ரோலர் கோஸ்டரில் செல்வதை போன்று ஒரு மோசமான அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு…
நாலரை வருஷம் மாட்டிக்கிட்டேன்.. சீனியர் சொன்னா எடப்பாடி கேட்க மாட்டார்! குமுறிய ஓ.பன்னீர்செல்வம்.!
சென்னை: சுமார் நான்கரை ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இடம் மாட்டிக்கொண்டிருந்தேன். மூத்தவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்கின்ற பக்குவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. அதிமுகவில் எனக்கு எந்த பதவியும் தேவையில்லை கட்சியில் இணைத்தாலே போதும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் 3ஆம், 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், பல இடங்களில் டெபாசிட்டும் பறிபோனது. இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சீனியர்கள் மீது எடப்பாடி பழனிசாமியும், சீனியர்கள் எடப்பாடி பழனிசாமி மீதும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படுமா என விவாதங்கள் முளைத்துள்ள நிலையில், அதிமுக மீண்டும் ஒன்று படவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதிமுக தலைமைக்கு வந்த பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலுமே அதிமுக தோல்வியை சந்தித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக…
“சமூகநீதியை புதைத்துவிட்டு.. போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமையை தமிழக அரசு நசுக்குகிறது”:ராமதாஸ்
சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. ஆனால் இதை மீறி தற்போது இந்த நியமனத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மாநகர போக்குவரத்து பேருந்து கழகம் மூலமாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதில் தற்போதைய நிலவரப்படி 3000 பேருந்துகள் மட்டுமே தினமும் இயக்கப்படுவதாகவும் மற்ற பேருந்துகள் பணியாளர்கள் பற்றாகுறையால் இயக்கப்படாமல் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் மாநகர போக்குவரத்து பேருந்து கழகம் மூலமாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து…
மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய மாலத்தீவு அதிபர்.. இந்தியா குறித்து சர்ச்சை பேச்சு! சீனாதான் காரணமா?
மாலி: மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், “வெளிநாட்டுப் படைகள் வெளியேற்றப்பட்டதன் மூலம் மாலத்தீவின் பாதுகாப்பு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது” என அந்நாட்டு அதிபர் முய்ஸு கூறியிருக்கிறார். மாலத்தீவு அதிபர் முய்ஜு அடிப்படையில் சீன ஆதரவாளர். கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில், “நாங்கள் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவோம்” என்று வெளிப்படையாகவே கூறி போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார். இதனையடுத்து தற்போது அங்கிருந்த நமது 90 ராணுவ வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருந்து வந்தனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை…
மனாமா: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்து பஹ்ரைன் திரும்பிய மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார். HM மன்னர் மற்றும் HH ஷேக் முகமது பின் சயீத் வரலாற்று பஹ்ரைன்-யுஏஇ உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்தனர். இன்று அபுதாபியின் ஜனாதிபதி விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது HM மன்னர் ஹமாத் HH ஷேக் முகமது பின் சயீத் அவர்களால் பிரியாவிடை பெற்றார். கோலாலம்பூரில் அவரது மாட்சிமை நிறுவும் விழாவில் கலந்து கொள்வதற்காக, மலேசிய அரசரான அவரது மாட்சிமை வாய்ந்த சுல்தான் இப்ராஹிம் இப்னி சுல்தான் இஸ்கந்தரின் அழைப்பின் பேரில், மன்னரும் மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்தார். ஹமாத் தனது பயணத்தின் போது, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார். இரு தரப்பினரும் ஒத்துழைப்புக்கான பகுதிகள் மற்றும் மூலோபாய…
பஹ்ரைன்: இந்திய பெண்கள் சங்கம் (ILA) பெருமையுடன் தங்களின் முதல் வாட்டர் டிரைவ் முயற்சியை ஜூலை 13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பஹ்ரைனில் உள்ள புசைதீனில் உள்ள கட்டுமான தளத்தில் தொடங்கியது. சுமார் 150 தொழிலாளர்கள் இந்த முயற்சியால் பயனடைந்துள்ளனர். கௌரவ.ஜனாதிபதி திருமதி. கிரண் மங்கல் கூடியிருந்த தொழிலாளர்களை உரையாற்றினார், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு முயற்சிகளைப் பாராட்டினார்.சவாலான கோடை மாதத்தில் பாதுகாப்பாகவும், நீரேற்றமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அஹ்மத் மன்சூர் அல்-ஆலியின் திரு. நிதின் ஷெட்டி இந்த நிகழ்விற்கு மைனா பாட்டில் தண்ணீரை தாராளமாக நிதியுதவி செய்து பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அனைவருக்கும் தண்ணீர், பழங்கள், பழச்சாறுகள், ILA உறுப்பினர்களால் விநியோகிக்கப்பட்டது, இதற்கு சங்கம் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திரு. ஷெட்டியின் முடிவில்லா ஆதரவிற்காக ILA தனது நன்றியைத் தெரிவித்தது, RJ ஜூஹி தொழிலாளர்களை மகிழ்வித்தார், தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தியாகங்களை…
மங்களூரு: போளூர் ஜாரந்தய தெய்வ ஸ்தானம் மற்றும் போளூர் பில்லவ கிராம சமிதி, ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளை இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 33 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய 10 திறமையான மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. புதுடெல்லி அனுரூப் நிறுவனத்தின் துணைத் தலைவரான தொழிலதிபர் சந்தோஷ் பூஜாரி, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். உதவித்தொகை பெறுபவர்கள் உதவித்தொகையைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் உயர்ந்த முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இது போன்ற தொண்டுகள் தெய்வீகப் பணி, புண்ணிய வேலை என்று குறிப்பிட்டு, அமைப்பின் முன்னோடியைப் பாராட்டி, நன்றியைத் தெரிவித்து, ஸ்ரீ நாராயண குருவின் “ஒழுங்கமைக்கும் திறன் ஒரு சக்தி” என்ற செய்தியைப் பின்பற்றத் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ வேதவியாஸ் காமத் தலைவராக கலந்து கொண்டார்.கோயில் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார், அவரிடம் இருந்தாலும், அவர் தனது இதயத்திற்கு மிகவும் பிடித்தவர் என்பதால் ஜரந்தயா கோயில்…
