Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .

    January 10, 2026

    குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

    January 10, 2026

    பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு

    January 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .
    • குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
    • பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு
    • நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா
    • உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் கோலாகலமான முறையில் பஹ்ரைன் நாட்டில் பிரமாண்டமாக நடந்தேறியது.
    • “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
    • இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
    • எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
    Facebook X (Twitter) Instagram
    Starvision News TamilStarvision News Tamil
    Demo
    • Home
    • World
    • Bahrain
    • Tamil Nadu
    • Technology
    Starvision News TamilStarvision News Tamil
    Home » சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. கொட்ட போகுது கனமழை! வானிலை மையம் தந்த எச்சரிக்கை
    Breaking News

    சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. கொட்ட போகுது கனமழை! வானிலை மையம் தந்த எச்சரிக்கை

    NEWS DESKBy NEWS DESKOctober 13, 2024Updated:October 13, 2024No Comments
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இன்று தொடங்கி வரும் அக். 17ம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழை கொட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் அக். 16ம் தேதி சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், தென் தமிழகத்தில் அநேக இடங்களில்) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை AWS (மதுரை) 160 மிமீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து திருப்புவனம் (சிவகங்கை) 140மிமீ, சிவகாசி (விருதுநகர்), தல்லாகுளம் (மதுரை), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), பெரியபட்டி (மதுரை), வெட்டிக்காடு (தஞ்சாவூர்) தலா 120 மிமீ மழை பெய்துள்ளது.

    வரும் நாட்களில் நிலவும் வானிலை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14 – ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.

    தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15 – 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்.

    இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    நாளைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    அக். 15ம் தேதி வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    அக். 16ம் தேதி வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    rain tamil nadu

    அக். 17ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. அக். 18, 19 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் அக். 15ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக். 16, 17 தேதிகளில் வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    rain tamil nadu

    வங்கக்கடல் பகுதிகளில் இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக். 15ம் தேதி ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    அரபிக்கடல் பகுதிகளில் இன்று கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், அரபிக்கடலின் மத்திய பகுதிகள், வடக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மத்தியமேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
    15.10.2024: எச்சரிக்கை ஏதுமில்லை.

    அக். 16, 17 தேதிகளில் கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    starvision tamil news ஸ்டார்விஷன் தமிழ் செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    NEWS DESK

    Related Posts

    குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

    January 10, 2026

    பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு

    January 10, 2026

    நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா

    January 10, 2026

    Leave A Reply Cancel Reply

    Starvision
    Top Posts

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023

    பாஜகவை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணி வகுத்துள்ள திட்டம் என்ன? – மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

    October 30, 2023
    Don't Miss
    Bahrain

    பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .

    By NEWS DESKJanuary 10, 2026

    பஹ்ரைன் அரசாங்கத்தின் சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் கீழ் இயங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பான பாரதி தமிழ் சங்கம்,…

    குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

    January 10, 2026

    பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு

    January 10, 2026

    நயன்தாராவைப் போல உழைப்பால் உயரவேண்டும் – கே.எஸ்.ஐஸ்வர்யா

    January 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Starvision
    About Us
    About Us

    StarVision News as we provide you with a global perspective on the issues and stories that matter most, connecting you to the pulse of the planet in real-time.

    Email Us: info@starvisionnews.com
    Contact: +973 36219358

    Facebook X (Twitter) Instagram YouTube
    Our Picks

    பாரதி தமிழ் சங்கம் இவ்வாண்டு பிரமாண்டமான முறையில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது .

    January 10, 2026

    குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

    January 10, 2026

    பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு

    January 10, 2026
    Most Popular

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023
    © 2026 Starvision Global Designed by Starvision Global.
    • Home
    • Politics
    • Lifestyle
    • Science

    Type above and press Enter to search. Press Esc to cancel.