சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கடிதம் வழங்கி உள்ளார். இருவரின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் 35 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் உடல்நலன் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து கடிதம் ஒன்றை ஸ்டாலினிடம், ராமதாஸ் வழங்கினார். அந்த கடிதத்தில், தமிழகத்தின் தேவையையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி , தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.