Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!

    April 3, 2025

    இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ

    April 3, 2025

    எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது

    February 11, 2025
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
    • இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ
    • எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது
    • ஊழியர்களுக்கு ரூ.14 கோடி போனஸ் அறிவித்த கோவை ஐடி நிறுவனம் – ஒவ்வொருவருக்கும் ஆண்டு சம்பளத்தில் 50%
    • டெல்லியில் சரிகிறது ஆம் ஆத்மி ஆட்சி.. அரியணை ஏறும் பாஜக.. 2013க்கு பின் ஆட்சி மாற்றம் – எக்சிட் போல்
    • போக்சோ வழக்கு: “அவர் என் கணவர்.. அவருடன்தான் வாழ்வேன்” பெண் வாதத்தால் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    • இந்திய பெண்கள் சங்கம் (ILA) மற்றும் தட்டாய் இந்து வணிகர்கள் சமூகம் (THMC) ஒரு மூலோபாய கூட்டுறவை உருவாக்குகின்றன
    • பஹ்ரைன் இராச்சியத்தின் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் பாரதி சங்கத்தில் தேர்தல் நடைபெற்றது.
    Facebook X (Twitter) Instagram
    Starvision News TamilStarvision News Tamil
    Demo
    • Home
    • World
    • Bahrain
    • Tamil Nadu
    • Technology
    Starvision News TamilStarvision News Tamil
    Home » மாணவர்களிடம் குட்கா, கூல் லிப்.. ஏன் குண்டாஸ் போட கூடாது! சாட்டையை சுழற்றிய நீதிபதி..முக்கிய ஆர்டர்!
    Breaking News

    மாணவர்களிடம் குட்கா, கூல் லிப்.. ஏன் குண்டாஸ் போட கூடாது! சாட்டையை சுழற்றிய நீதிபதி..முக்கிய ஆர்டர்!

    NEWS DESKBy NEWS DESKOctober 4, 2024Updated:October 4, 2024No Comments
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மதுரை : கூல் லிப், குட்கா, புகையிலை பயன்பாடுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும், கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    நீதிபதி பரத சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழக்குகளை விசாரணை செய்து வருகிறார்.

    இதில் அதிகமாக மாணவர்கள், இளைஞர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கணேஷ் ஹான்ஸ் போன்ற புகை பொருட்களை பயன்படுத்தியதாகவும், கூல் லிப் என்ற குட்காவை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் வழக்கு பதிவு செய்து ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த விசாரணையின் போது நீதிபதி பள்ளி மாணவர்கள் இந்த கூல் லிப் குட்கா வகைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் மிகுந்த வேதனையாக உள்ளது. எனவே ஏன் கூல் லிப் குட்கா வகைகளை இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறார்.

    இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி, தமிழக அரசு தமிழகத்தில் கூல் லிப் , குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் தடை செய்து உள்ளது இறந்தபோதும் அண்டை மாநிலங்களில் இருந்து விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கொண்டு வருகின்றனர்.

    அவர்களில் கடுமையான நடவடிக்கையின் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது. மீறி விற்பனை செய்பவர்கள் கடைகள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பலர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்.

    மேலும் நமது அருகாமை மாநிலங்களின் அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில் குட்கா பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் குட்கா புகையிலை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை கடிதம் அனுப்பி உள்ளது என வாதிட்டார்.

    ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூல் லிப், குட்கா வகை பொருட்கள் வேறு மாநிலங்களில் தான் அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் எந்த தயாரிப்புக்கும் அனுமதி வழங்கவில்லை. மேலும் இவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஒன்றிய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது என வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, தற்போது கூல் லிப், குட்கா புகையிலை பொருள் வாலிபர்கள் இளைஞர்களை தாண்டி பள்ளி மாணவர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது. பல பள்ளி மாணவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வாய் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும். அரசு கள்ள சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது எவ்வாறு குண்டர் சட்டம் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்களோ? அதே போல கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை முற்றிலும் தடை செய்ய முடியும். எனவே, இந்த நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விரைவில் போன்ற பொருட்களை தடை செய்வது குறித்து உரிய வழிமுறைகளை உத்தரவுகளாக பிறப்பிக்க உள்ளது எனக் கூறி தீர்ப்புக்காக வழக்கை ஒத்தி வைத்தார்.

    starvision tamil news ஸ்டார்விஷன் தமிழ் செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    NEWS DESK

    Related Posts

    “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!

    April 3, 2025

    இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ

    April 3, 2025

    எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது

    February 11, 2025

    Leave A Reply Cancel Reply

    Starvision
    Top Posts

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023

    பாஜகவை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணி வகுத்துள்ள திட்டம் என்ன? – மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!

    October 30, 2023
    Don't Miss
    Breaking News

    “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!

    By NEWS DESKApril 3, 2025

    டெல்லி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது முஸ்லிம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியதாக மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக தலைவருமான…

    இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ

    April 3, 2025

    எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது

    February 11, 2025

    ஊழியர்களுக்கு ரூ.14 கோடி போனஸ் அறிவித்த கோவை ஐடி நிறுவனம் – ஒவ்வொருவருக்கும் ஆண்டு சம்பளத்தில் 50%

    February 5, 2025
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Starvision
    About Us
    About Us

    StarVision News as we provide you with a global perspective on the issues and stories that matter most, connecting you to the pulse of the planet in real-time.

    Email Us: info@starvisionnews.com
    Contact: +973 36219358

    Facebook X (Twitter) Instagram YouTube
    Our Picks

    “காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!

    April 3, 2025

    இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக லோக்சபாவில் துரைவைகோ

    April 3, 2025

    எச்.எம் கிங்கின் ஆதரவின் கீழ், பஹ்ரைன் இன்டர்நேஷனல் கார்டன் ஷோ 2025 பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது

    February 11, 2025
    Most Popular

    முதல் முறையாக கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து; பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்

    October 30, 2023

    என்னை வகுப்புவாதி என்று சொல்ல முதல்வருக்கு என்ன தகுதி! – மத்திய அமைச்சர்

    October 30, 2023

    காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

    October 30, 2023
    © 2025 Starvision Global Designed by Starvision Global.
    • Home
    • Politics
    • Lifestyle
    • Science

    Type above and press Enter to search. Press Esc to cancel.