தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வின் பகுதியாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 18 ஆகஸ்ட் 2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிட்டார்.
வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவில் பதிக்கப்பட்ட அதில் ஒரு நாணயத்தை திமுக செயல் உறுப்பினர்களான ஷஃபீக் மற்றும் டேவிட் ஆகியோர் பஹ்ரைனுக்கு கொண்டு வந்து, பஹ்ரைன் தமிழ் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களை பார்வையிடச் செய்தார்.
“தமிழ் வெல்லும் “ என்ற வாசகத்துடன் கூடிய 100 ரூபாய் நாணயம் கட்சி பாகுபாடின்றி தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் பெருமை படக்கூடிய விடயம் என கருத்து தெரிவித்த அவர் , பஹ்ரைன் வாழ் தமிழர்களின் பார்வைக்கு கொண்டு வந்த ஷபீக் மற்றும் டேவிட் இருவருக்கும் அயலகம் வாழ் தமிழர்களின் சார்பில் நன்றி தெரிவித்தார்.