டெல்லி: டெல்லியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். 51-60 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. ஆம் ஆத்மி வெறும் 10-19 இடங்களில் வென்று தோல்வி அடையும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
இதன் மூலம் 2013க்கு பின் முதல்முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் 2013ல் இருந்து ஆம் ஆத்மியை தவிர வேறு கட்சி ஆண்டது இல்லை. இலவச மின்சாரம், ஊழலற்ற நிர்வாகம் என்று பல காரணங்களால் அந்த கட்சி ஆட்சியில் இருந்தது.
ஆனால் கடந்த சில மாதங்களாக முதல்வராக இருந்த கெஜ்ரிவால் கைது, துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது, அதிஷி முதல்வராக பதவி ஏற்பு என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையான ஆட்டம் கண்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். 51-60 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. ஆம் ஆத்மி வெறும் 10-19 இடங்களில் வென்று தோல்வி அடையும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அங்கே ஒரு இடம் கூட வெல்ல வாய்ப்பில்லை என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இன்று 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6:30 மணிக்கு மூடப்படும். மாலை 6.30 மணிக்கு பின் தேர்தல் தொடர்பான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி – பாஜக – காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. அதேபோல் சிபிஎம், சிபிஐ கட்சிகளும் தனியாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் மகிளா சம்மன் யோஜனா என்ற பெயரில் ரூ.2100 மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. பாஜக சார்பாக மகிளா சம்ரிதி யோஜனா என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக பெண்களுக்கு மாதம் ₹2500 நிதியுதவி வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜ்னா தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் பாஜக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்.. ஆம் ஆத்மி வெல்ல வாய்ப்பே இல்லை என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். 51-60 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என்று பீப்பிள் பல்ஸ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.