Author: NEWS DESK

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் மாமியார் சில பகீர் தகல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது சஞ்சய் நல்லவன் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதேநேரம் இந்த குற்றத்தை அவன் தனியாகச் செய்திருக்க முடியாது என்றும் கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த ஆக. 8ம் தேதி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவர் கொலை: இந்தச் சம்பவத்தில் போலீசார் இதுவரை ஒருவரைக் கைது செய்துள்ளனர். அதேநேரம் இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய்…

Read More

சென்னை : சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தன் மகன், மருமகளைக் காப்பாற்றவும்; புகார்களில் சிக்கியுள்ள தன் மருமகன் மற்றும் சில மந்திரிகளைக் காப்பாற்றவும் ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் கவலையில்லை என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் திருமணவிழாவில் பேசியதற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமண விழாவில் பேசியதற்கு பதிலடி கொடுத்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது “‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா’ என்று, நம்மை எல்லாம் ஆளாக்கிய புரட்சித் தலைவர் கூறியிருக்கிறார்.நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின், பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று கேட்பதோடு, அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார். ‘Go Back Modi’…

Read More

சென்னை: பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் கட்டணம் மற்றும் வரி உயர்வால் பாதிகப்பட்டு வரும் ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா? பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மூன்று கட்டங்களில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக வீடுகளுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு…

Read More

சென்னை: சென்னையில் எந்த இடத்தில் மழை நீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகளை காட்டச் சொல்லுங்க.. எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என இன்று தெரிவித்து உள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் கொளத்தூரில் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனையடுத்து ஜி.கே.எம். காலனியில் தொடக்கப்பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை முதல்வர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சீனிவாச நகர் 3 வது பிரதான சாலையில் புதிய சென்னை தொடக்கப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நேர்மை நகரில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் சிஎம்டிஏ மூலம் கட்டப்பட்டு வரும் வணிக…

Read More

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் முழுக்க முழுக்க தமிழர்கள் பலர் களமிறங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நாம் நேரடியாக பெற்ற சில முக்கியமான தகவல்களை இங்கே வழங்கி உள்ளோம். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 280 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 1000 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன. அங்கே மீட்பு பணிகளை மாநில அரசின் பேரிடர் மீட்பு படைகள், தேசிய பேரிடர் மீட்பு படைகள் களமிறங்கி தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்கு இடையே கூட்டம் கூட்டமாக தமிழர்கள் அங்கே மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக நேரடியாக வயநாட்டு மக்களிடம் ஒன் இந்தியா சார்பாக பேசினோம். வயநாடு பொதுவாக தமிழர்கள் அதிகம் உள்ள பகுதி. மூன்று மாநிலங்கள் இணையம் இடம் என்பதால் இங்கே தமிழர்கள் அதிகம் உள்ளனர். அதே…

Read More

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும், ரயில்வே துறையை மாநில அரசு வசம் கொடுத்துவிடுவார்களா? எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர் இதில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் புறக்கணித்தது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, “சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதியை இந்த…

Read More

சென்னை: சென்னையிலிருந்து திருச்சிக்கு இன்டிகோ விமானத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சென்றதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். விமானம்தான் ஆனால் ரோலர் கோஸ்டரில் செல்வது போல் ஒரு பயத்தை உண்டாக்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று மதியம் இண்டிகோ விமானத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பயணம் செய்தார். அப்போது தனக்கும், சக பயணிகளுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை விவரித்துள்ளார். இதுகுறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் இண்டிகோ விமானத்தின் தரம் மோசமாக உள்ளதை அந்த நிறுவனம் சரி செய்ய வேண்டும். இந்த விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் ஒவ்வொரு பயணிகளும் வியர்த்து மூச்சு முட்டுவது போல் இருந்தனர். இந்த ஜூலை மாதம் வெப்பமான வானிலையின் போது, இந்த விமானத்தில் செல்வது ரோலர் கோஸ்டரில் செல்வதை போன்று ஒரு மோசமான அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு…

Read More

சென்னை: சுமார் நான்கரை ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இடம் மாட்டிக்கொண்டிருந்தேன். மூத்தவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்கின்ற பக்குவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. அதிமுகவில் எனக்கு எந்த பதவியும் தேவையில்லை கட்சியில் இணைத்தாலே போதும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் 3ஆம், 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், பல இடங்களில் டெபாசிட்டும் பறிபோனது. இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சீனியர்கள் மீது எடப்பாடி பழனிசாமியும், சீனியர்கள் எடப்பாடி பழனிசாமி மீதும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படுமா என விவாதங்கள் முளைத்துள்ள நிலையில், அதிமுக மீண்டும் ஒன்று படவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதிமுக தலைமைக்கு வந்த பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலுமே அதிமுக தோல்வியை சந்தித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக…

Read More

சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. ஆனால் இதை மீறி தற்போது இந்த நியமனத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மாநகர போக்குவரத்து பேருந்து கழகம் மூலமாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதில் தற்போதைய நிலவரப்படி 3000 பேருந்துகள் மட்டுமே தினமும் இயக்கப்படுவதாகவும் மற்ற பேருந்துகள் பணியாளர்கள் பற்றாகுறையால் இயக்கப்படாமல் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் மாநகர போக்குவரத்து பேருந்து கழகம் மூலமாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து…

Read More

மாலி: மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், “வெளிநாட்டுப் படைகள் வெளியேற்றப்பட்டதன் மூலம் மாலத்தீவின் பாதுகாப்பு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது” என அந்நாட்டு அதிபர் முய்ஸு கூறியிருக்கிறார். மாலத்தீவு அதிபர் முய்ஜு அடிப்படையில் சீன ஆதரவாளர். கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில், “நாங்கள் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவோம்” என்று வெளிப்படையாகவே கூறி போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார். இதனையடுத்து தற்போது அங்கிருந்த நமது 90 ராணுவ வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருந்து வந்தனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை…

Read More