Author: NEWS DESK

கேரள மாநிலம் கொச்சி அருகே களமசேரி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், களமசேரி குண்டுவெடிப்பு ஒரு சோகமான சம்பவம் என்றும், முதல்வர் தன்னை வகுப்புவாத விஷம் என்று குறிப்பிட்டதை அவர் தெளிவுபடுத்தினார். கேரள அரசியிலில் ஊழல் பிரச்சனை எழுப்பும் போது தங்களை வகுப்புவாதிகள் எனக்கூறி முதல்வர் பிரனாயி விஜயன் மறைக்கப்பார்க்கிறார் எனவும் குற்றம்சாட்டினார். கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹமாஸ் அமைப்பினர் கலந்து கொண்ட விவகாரத்தை குறிப்பிட்ட அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், நாசகார சக்திகளுக்கு எதிராக பேசுபவர்களை வகுப்புவாதிகள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறுகிறார். இலத்தூர் சம்பவம் தீவிரவாத தாக்குதல் அல்ல என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். ஆனால், இதன் விசாரணையில் ஜாகிர் நாயக் குழுவின் பங்கு இருப்பது பின்னர் தெளிவாகியது. இந்த…

Read More

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் என 10ம் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாய பெருங்குடி மக்களும், மலைவாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களையும், மருத்துவமனை, அரசின் உதவிகளுக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவதற்கும் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சார்ந்த மலைவாழ் மக்கள் அரசுக்கு புதிய வழித்தடம் மற்றும் பேருந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் நகரப் பகுதிக்கு வந்து செல்வதற்காக முதல் பேருந்து இயக்கத்தை போதகாடு பகுதியில் இருந்து பையர்நத்தம். பொம்மிடி, கடத்தூர் வழியாக தருமபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை பேருந்தின் முதல் சேவையை பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் கொடி…

Read More