Author: NEWS DESK

உலக போட்டித்திறன் மையம் – இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் (IMD) வெளியிட்டுள்ள 2024 உலக போட்டித்தன்மை தரவரிசையில் பஹ்ரைன் இராச்சியம் ஒன்பது இடங்கள் முன்னேறி 21வது இடத்தைப் பிடித்துள்ளது.அதன் 2022 அறிமுகத்திலிருந்து இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம், வளர்ச்சியை விரைவுபடுத்தும் மற்றும் அதன் தனித்துவமான போட்டி நன்மைகளை மேம்படுத்தும் அதன் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் இராச்சியத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, பஹ்ரைன் இராச்சியம் 12 குறிகாட்டிகளில் உலகளவில் 1 வது இடத்தில் உள்ளது மற்றும் 75 குறிகாட்டிகளில் உலகளாவிய முதல் 10 இல் உள்ளது.இந்த சிறப்பான செயல்திறன் பல்வேறு துறைகளில் பரவியுள்ளது, அரசாங்கக் கொள்கையின் அனுசரிப்பு முதல் பயனுள்ள பொது-தனியார் கூட்டாண்மை வரை தொழில்நுட்ப முன்னேற்றத்தை உந்துகிறது. பஹ்ரைனின் சமீபத்திய சாதனை குறித்து நிதி மற்றும் தேசியப் பொருளாதார அமைச்சகத்தின் தேசியப் பொருளாதாரத்தின் துணைச் செயலாளரான அவரது மேதகு திரு. ஒசாமா சலே அலலாவி கருத்துத் தெரிவித்தார்: “பஹ்ரைன்…

Read More

ரோம்: இத்தாலியில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, போருக்கான தீர்வு பேச்சுவார்த்தைதான் என்று கூறியுள்ளார். சோவியத் காலத்தில் அதற்கு போட்டியாக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. ஆனால், சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கப் புள்ளி. கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொண்டே வந்த அமெரிக்காவின் நேட்டோ, கடைசியாக உக்ரைனுக்கு வந்து நின்றது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஆதரவாளர். எனவே, நேட்டோவுக்கு அனுமதியளித்தார். இது ரஷ்யாவுக்கு எரிச்சலை கிளப்பியது. உக்ரைன் ரஷ்யாவுக்கு பக்கத்தில் உள்ள நாடு. ஏற்கெனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் ஏழரை சனி. இப்படி இருக்கும்போது உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் அமெரிக்க படைகள் நேரடியாக ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இது பெரும் அச்சுறுத்தல். எனவே ரஷ்யா போரை அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில்…

Read More

ஒடிசாவின் முதலமைச்சராக மோகன் மாஜி பதவியேற்றுக்கொண்டார். ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 4 முறை பாஜக எம்.எல்.ஏவான மோகன் மாஜி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாசை சந்தித்து மோகன் சரண் மாஜி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு பழங்குடி இனத்தை சேர்ந்த மோகன் மாஜி ஒடிசாவின் முதலமைச்சராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரபாதி பரிதா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதேபோல் இதர அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,…

Read More

மதிப்பிற்குரிய அல் ஷாயா குழுமத்தால் புகழ்பெற்ற உணவுப் பாதுகாப்பு சப்ளையர் விருது – விருந்தோம்பல் மூலம் VMB கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த பாராட்டு மிக உயர்ந்த உணவு தரம் மற்றும் பாதுகாப்பு தரத்தை நிலைநிறுத்துவதில் VMB இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். ஒரு முன்னணி FMCG விநியோகஸ்தராக, VMB கையாளப்படும் ஒவ்வொரு தயாரிப்பும் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதில் மிக முக்கியத்துவத்தை அளிக்கிறது.இந்த விருது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான தயாரிப்புகளை வழங்குவதில் VMB இன் முழு குழுவின் உன்னதமான முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. “அல் ஷாயா குழுமத்திடம் இருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நாங்கள் நம்பமுடியாத பெருமை அடைகிறோம்,” என்று VMB இன் பார்ட்னர் திரு. ஹேமந்த் அசார் கூறினார்.”இந்த விருது எங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று மட்டுமல்ல, எங்கள் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் பெறும் நம்பிக்கை…

Read More

மனமா: பாலஸ்தீனம் உட்பட போர்கள் மற்றும் மோதல்களை நிறுத்தவும், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கவும் உரையாடல் பாதையை உருவாக்குவதற்கு பஹ்ரைன் பல முன்முயற்சிகளை முன்வைத்துள்ளது. https://youtu.be/FW7sgCN2OAw?si=72cw0zfQvuC31uPb சாகிர் அரண்மனையில் நடைபெற்ற 33 வது அரபு உச்சி மாநாட்டின் தொடக்க உரையின் போது மாட்சிமை மிக்க மன்னர் ஹமாத் இந்த நடவடிக்கைகளை வெளிப்படுத்தினார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் இரு நாடுகளின் தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த அமைதி காக்கும் படைகளை நிலைநிறுத்துமாறு அரபு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. 33 வது அரபு உச்சிமாநாட்டின் முடிவிற்குப் பிறகு 22 உறுப்பினர்களைக் கொண்ட குழு வெளியிட்ட ‘பஹ்ரைன் பிரகடனத்தின்’ ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு இருந்தது. போர்களை முடிவுக்குக் கொண்டு வரவும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டை அதிகரிக்கவும் அவரது மாட்சிமை பொருந்திய மன்னர் ஹமாத் முன்மொழிந்த முன்முயற்சிகளின் தொகுப்பை அரபு நாடுகள் செயல்படுத்துவதை பஹ்ரைன் மேற்பார்வையிடும். 33 வது அரபு உச்சி…

Read More

சென்னை: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ஐந்து கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் முடிந்தவுடன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ், திமுக அடங்கிய இந்தியா கூட்டணிக்கும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் தோல்வியைத் தெளிவாக பாஜகவும், பிரதமர் மோடியும் நன்கு புரிந்து கொண்டதால் உச்ச வரம்பின்றி பொய்ப் பிரச்சாரங்களில், முற்றிலும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக அவதூறு பேச்சினை, வெறுப்புரைகளை நாளும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டினர் திருடர்கள் என்ற ஒடிசாவில் பிரமதர் மோடி பேசியுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

Read More

மனாமா: பிருந்தாவனி டான்ஸ் அகாடமி, ஸ்டார்விஷன் ஈவென்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் மே 3ம் தேதி பரதநாட்டியத்தில் அறிமுகமாகிறது. https://youtu.be/TFHzKc3pnQo பஹ்ரைன் கலாச்சார மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும்.அத்விகா, அஷ்வின், அக்ஷரா அஷ்வின், தேஸ்னா பிரவீன் குமார், திஷா மங்கல்பாடி, நேத்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ரித்திகா பிரபு ஆகியோர் பஹ்ரைன் மற்றும் தமிழகத்தின் பிரபல நடனக் கலைஞரான ஹன்சுல் கனியின் பயிற்சியில் அறிமுகமாகிறார்கள்.தவானி, அல் ஜசீரா குழுமத்தின் தலைவர் அப்துல் ஹுசைன் கலீல் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொள்கின்றனர். ரெட் ஹவுஸ் மார்க்கெட்டிங் தலைவர் ஜார்ஜ் எஃப் மிடில்டன், ஸ்டார்விஷன் ஈவென்ட்ஸ் & மீடியா குரூப் சேர்மன் சேதுராஜ் கடக்கல், நியூ மில்லினியம் முதல்வர் அருண்குமார், ஆசிய பள்ளி முதல்வர் மோலி மோமன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

Read More

மனாமா: பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் அளிப்பதோடு, அப்பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கவும், போரை விரிவுபடுத்தவும் அச்சுறுத்தும் வகையில், பிராந்தியத்தில் ராணுவ அதிகரிப்பு குறித்து பஹ்ரைன் இராச்சியம் கவலையுடன் பின்தொடர்கிறது. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்தகைய அதிகரிப்பின் கடுமையான பின்விளைவுகளிலிருந்து பிராந்திய மக்களைக் காப்பாற்றுவதற்காக, தீவிரத்தை தணிக்கவும், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் தேவை என்று அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Read More

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான டி. ஜெயக்குமார் சென்னையில் இன்று (ஏப்.14,2024) செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, “நான் ராயப்புரத்தில் தோற்க பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி வைத்ததே காரணம்” என்றார். இது குறித்து பேசிய அவர், “பாரதிய ஜனதா உடன் கூட்டணி வைத்ததால்தான் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தோற்றோம். ராயப்புரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நான் முடிசூடா மன்னனாக திகழ்ந்தேன். பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன்.அது ஒரு ஓடாத சைக்கிள், பைக். அ.தி.மு.க.வின் தோல்விக்கு பாரதிய ஜனதா தான் காரணம். நான் தேர்தலில் நிற்கும்போத சிறுபான்மையினர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர். அவர்களுக்கு என் மீது கோபம் கிடையாது. பாரதிய ஜனதா கட்சி மீதுதான் கோபம். பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால், ராயப்புரத்தில் உள்ள 40 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க.வுக்கு சென்று விட்டன.நான் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்தேன். ஆனால் திமுக 40 ஆயிரம்…

Read More

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை-திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயிலில் பயணித்த சென்னை அகரத்தைச் சேர்ந்த எஸ்.சதீஷ், எஸ்.நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த எஸ்.பெருமாள் ஆகிய 3 பேரிடம் இருந்து ரூ.3.98 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.  விசாரணையின்போது சதீஷ், தான் சென்னையில் உள்ள நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் ஊழியர் என்றும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் போலீசாரிடம் கூறினார். சதீஷ் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை வைத்திருந்ததாகவும், நயினார் நாகேந்திரனின் அடையாளச் சான்றிதழின் நகலும் அவரிடம் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, சென்னை மற்றும் திருநெல்வேலியில் சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணம்…

Read More