தெறிக்கும் ரத்தக் காட்சிகளுடன், விக்ரம் படத்தின் மூலம் சூர்யாவின் ரோலக்ஸ் கதாப்பாத்திரம் அத்தனை எளிதாக யாரும் மறக்க முடியாது. முரட்டத்தனமான கதாப்பாத்திரமாக ரோலக்ஸ் கதாப்பாத்திரம் இருந்தாலும், அதனை ரசிக்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம்.
இந்த நிலையில் சென்னையில் நடிகர் கார்த்தி 25 நிகழ்ச்சி, அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, கார்த்திக்கு எல்லாம் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றார்.
பருத்திவீரன் படம் கமல்ஹாசன் பூஜை போட்டு ஆரம்பித்தது என்றும் படம் வெளியான பின்பு கார்த்தி சரியாக பயன்படுத்தி விட்டார் என்று ரஜினி பாராட்டினார் என்று சூர்யா குறிப்பிட்டார்.