சென்னை: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ஐந்து கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் முடிந்தவுடன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ், திமுக அடங்கிய இந்தியா கூட்டணிக்கும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் தோல்வியைத் தெளிவாக பாஜகவும், பிரதமர் மோடியும் நன்கு புரிந்து கொண்டதால் உச்ச வரம்பின்றி பொய்ப் பிரச்சாரங்களில், முற்றிலும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக அவதூறு பேச்சினை, வெறுப்புரைகளை நாளும் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டினர் திருடர்கள் என்ற ஒடிசாவில் பிரமதர் மோடி பேசியுள்ளார்” என்று குறிப்பிட்டார்.